Tuesday, July 17, 2012

பில்லா2

நான் ஈ பில்லா SPIDERMAN மூன்றுக்கும் விமர்சனம் எழுதவில்லை எழுத வேண்டும் என நினைத்து கொண்டே எழுதாமல் விட்டுவிட்டேன் அதான் மூன்றுக்கும் சேர்த்து எழுதி விடலாம் என்று...விமர்சனம் என்று எழுதினால் அவ்வளவு தான் நீங்க படிக்காமல் ஓடி போய் விடுவீர் அதனால கொஞ்சமாய் அந்த படத்தை பற்றி பார்ப்போம்.......விமர்சனம் எல்லாம் கிடையாது...

1.நான் ஈ:-
           ஹாலிவுட் கிங் காங் காதல் தோத்து போய் இருக்கலாம் எங்க ஊரு ஈ காதல் ஜெயித்துவிட்டது...இந்த படத்திற்கு அனைவரும் POSITIVE விமர்சனம் கொடுத்து உள்ளனர் இதை குறைகூறவும் இதில் எதுவும் இல்லை அங்க தான் நிற்கிறார் ராஜமௌலி சரி உட்கார்ந்து இருக்கிறார்.நான் படத்திற்கு போனது ஈக்காக இல்ல அந்த கொஞ்ச நேர காதல் காட்சிக்கு தான் ஆனால் சிறிது நேரம் தான் அந்த கொஞ்ச நேரமும் செம்ம சூப்பர்ராய் இருந்தது.இவர் முழு காதல் படம் எடுத்தால் சூப்பர்ராய் இருக்கும் எல்லோரும் கௌதமின் விண்ணை தாண்டி வருவாயாவை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்.சமந்தா எந்த படத்திலும் இல்லாத அழகு அதை போல நானி வெப்பம் படத்தில் இருந்ததை விட அழகிய HANDSOME BOY வந்து விட்டு போகிறார்...அடுத்தது வில்லன் சுதிப் இவரின் மற்ற படங்களை கூகிள் தேடி பார்த்தேன் நான் ஈ மட்டும் அழகாய் இவரும் தெரிகிறார்...எல்லோரும் ஹீரோ ஈ என்று சொல்லுறாங்க ஆனால் உண்மையில் ஹீரோ சுதிப் தான் இவரின் EXPRESSION எல்லோருக்கும் பிடித்து உள்ளது காம,கொடூர வில்லன் செம்ம ஆளு...அதன் பிறகு ஒளிபதிவும்,கிராபிக்ஸ் தான் ஹீரோ ஆரம்பத்தில் ஈ முட்டையில் இருந்து வெளிவரும் காட்சி தான் கொஞ்சம் கிராபிக்ஸ் தெரிந்தது அதன் பிறகு ஒரு இடத்தில் கூட உங்களால் கிராபிக்ஸ் கண்டுபிடிக்க இயலாது....இந்த படத்தில் தான் எல்லாம் அழகாய் உள்ளது.இவரை எல்லாம் நல்லா தமிழ் பயன்படுத்தி கொள்ளலாம்.

2.பில்லா2:-
                  பலரும் தல யோட படத்திற்கு எதிர்பார்ப்பில் இருந்து பலரும் ஏமாந்து உள்ளனர்.நான் எப்படி என்று எல்லாம் கேட்காதிர்கள் மற்றவர்கள் அளவிற்கு இல்லை என்றாலும் கொஞ்சம்மாய் வேதனை தான்...படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை சைடு உள்ள POLL மாஸ் ஹிட் வோட் விழுந்தது இப்ப பரவாயில்லை என்பதில் விழுந்து கொண்டு உள்ளது.தலயின் பல படங்கள் எதிர்பார்ப்பில் இருந்து பலரை ஏமாத்தி உள்ளது அந்த லிஸ்ட் இதுவும் இணைந்து விட்டது.விமர்சனம் எழுதும் அனைவரும் பிச்சி மெய்கின்ற்றனர்...முதல் நாள் தியேட்டர் கூட்டம் சும்மா சொல்லகூடாது அப்படி ஒரு கூட்டம் பலரும் டிக்கெட் கிடைக்கவில்லை என்றே சொன்னார்கள் எனக்கு எல்லாம் ரொம்ப ஈஸியா கிடைத்தது..வில்லன் ரெண்டு பேரும் சூப்பர் நல்லாவே நடித்து இருப்பார்கள் வித்யூத் ஜம்வால் மிரட்டல் சிலர் விமர்சனம் எழுதும் போது வன்முறை ரத்தம் பார்க்க போய் விடாதிங்க என எழுதுறாங்க ஒரு காங்ஸ்டார் படம் பார்த்தது இல்லை போல பாவம் அவர்கள்.தல நடக்கிறார் என சொல்லுறாங்க மற்ற நடிகர்கள் எல்லாம் பறக்குறாங்களா... படிக்கும் போது போர் அடித்தால் இந்த வீடியோவை பார்க்கவும் சிரித்து கொண்டே இருப்பீங்க CLICK

இந்த ஸ்டில் பார்த்தால் தசாவதாரம் படத்தில் வரும் கருப்பு கமல் ஞாபகம் வருது
என்னை பொறுத்தவரை நல்லபடியா விமர்சனம் எழுதியது ராஜ் அப்புறம் சீனு தான்...ராஜ் விமர்சனத்தை படித்த பிறகு தான் எனக்கு பிடிக்காமல் இருந்த பில்லா பிடிக்க ஆரம்பித்தது அதற்கு முன் வரை என்னடா இப்படி ஆச்சே என இருந்தேன் நீங்களும் படித்து பாருங்கள்...

3.AMAZING SPIDERMAN:-
                  இந்தியாவில் அவதார் வசூல் செய்ததை விட அதிகமாய் வசூல் செய்து விட்டதாக சோனி சொல்லியுள்ளனர்.முதலில் இருந்து எடுத்து விட்டு மீண்டும் முதலில் இருந்து ஏன் எடுத்தார்கள் என்று தெரியவில்லை..பேட்மேன் சரி வராததால் மீண்டும் எடுத்தார்கள் இதை ஏன் புதிய பாகத்தில் யாரை வில்லனாய் போடுவது என சோனிக்கு பிரச்னை வந்ததால் இதை மீண்டும் தோடர்ந்து வெற்றி கண்டு உள்ளனர் எல்லாம் எதிர்பார்ப்பு தான்...எனக்கு பிடித்து இருந்தது என்ன பல்லியா மாறிய ப்ரோப்பசர் தான் பார்க்கவே பிடிக்கவில்லை.அப்படியே காமிக்ஸ் எப்படி வந்ததோ அப்படியே எடுப்பதால் எனக்கு பிடித்து உள்ளது.அது மட்டும் இல்லாமல் முந்தைய SPIDERMAN வந்த மேரி ஜேன் சுத்தம்மா பிடிக்கவே இல்லை..இதில் வரும் பாப்பா க்வீன் ரொம்ப பிடித்து உள்ளது.அப்படியே மைக்ரோசாப்ட் அவங்களின் பிங் சர்ச் என்ஜின் விளம்பரம் செய்து உள்ளனர் போல பீட்டர் தன்னுடைய அப்பா அம்மாவை பற்றி இணையத்தில் சர்ச் செய்யும் போதும்,பல்லியா மாறியதை சர்ச் செய்யும் போதும் பிங் தான் பயன்படுத்துவார்...சோனி கூட தங்களின் XPERIA MOBILE பீட்டர் பயன்படுத்துவார்....காமிக்ஸ் பல்லியா மாறியவர் கடைசிவரை பல்லியாவே இருப்பார் ஆனால் இதில் மனிதனாய் மாரிவிட்டார்.X-MAN,HULK,FANTASTIC-4,என்னோட FAVORITE HERO CAPTAIN AMERICA,IRON-MAN என மார்வல் FAMILY வரும் இதில் எப்படி வரும் என தெரியவில்லை.SPIDERMAN பொறுத்த வரை பீட்டர் ஒரு COLLAGE STUDENTடா தான் வருவார் இதில் என்ன வென்றால் ஸ்கூல் பையனாய் வருகிறார்...ULTIMATE SPIDERMAN என ஒரு SERIES DISNEY போய் கொண்டு உள்ளது...

4.BATMAN DARK KNIGHT RISES:-
                      யப்பா படத்துக்கு என்னமா எதிர்பார்ப்பு இந்த வாரம் 20தேதி ரிலீஸ் ஆக போகிறது.நோலன் உண்மையில் பெரிய ஆளு தாங்க எல்லோரின் ஹார்ட் பீட் ரொம்ப வேகமாய் துடிக்கும் அளவிற்கு TRAILER எல்லாம் வந்தது ஆனா TRAILER வந்த போது எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை.ஏன் என்றால் படத்தின் கதை தெரியாமல் ஒன்னும் புரியவில்லை அப்புறம் கருந்தேளின் TRAILER விமர்சனத்தை படித்த பின்பு தான் புரிந்தது பிடித்தும் போனது.தமிழ் உதயநிதி வெளியிடுகிறார் போல ஹாலிவுட் DUPPED என்றாலே தேனாண்டாள் தான் இப்ப உதயநிதி எடுத்து உள்ளார் DARKKNIGHT கிடைத்த வரவேற்ப வைத்து இதை வெளியிடுகிறார் போல பார்த்து பாஸ் உங்க நேரம்  ஊத்தீகொள்ள  போகுது அதுக்கு வாய்ப்பே இல்ல.இதற்கு முன் வந்த பாகத்தில் ஜோகர் காமெடி வேளையில் பலரையும் கவர்ந்து படமும் ஹிட் இந்த பாகத்தில் ஜோகர் விட பலசாலி புத்திசாலியான BANE பேட்மேன் முதுகையே உடைத்து எரிந்து விடுவாராம் இதை பற்றி தெரிந்து கொள்ள கருந்தேளின் வலைபுவிற்கு சென்று பாருங்கள்...BANE பலத்தினை தெரிந்துகொள்ள கிளிக்....ட்ரைலர் விம்ரசனம்கிளிக்....அப்படியே அவரின் WAR OF THE RING E-BOOK டவுன்லோட் செய்து படித்து பாருங்கள் LOARD OF THE RING பற்றி பலவும் அறிந்து கொள்ளலாம் இதற்கு தனி பதிவே போடனும் என நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் பலரும் எழுதி விட்டதால் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டேன் EBOOK டவுன்லோட் செய்யகிளிக்...
Powered by Blogger.